உக்ரைன் ரஷ்ய யுத்தம் பதின்நான்காம் நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று செவ்வாய் கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வ்லோடிமிர் ஜெலென்ஸ்கி, சரணடையும் விருப்பமில்லை. ஆனால் டான்பாஸ் மற்றும் கிரிமியாவின் எதிர்கால நிலை மற்றும் நேட்டோவில் தனது நாட்டின் உறுப்புரிமை குறித்து பேச்சுவார்த்தை மேற் கொள்ளலாம் என தொலைக்காட்சி உரையொன்றில் முதற்தடவையாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ரஷ்யாவின் யுத்தவெறி, உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பதை உலகநாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும் என எச்சரித்திருந்த அவர் பின்னர் பேச்சுவார்த்தை குறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்று அறிவிக்கப்பட்ட மனிதாபிமான போர்நிறுத்த வேளையில், 5000 மக்கள் யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இரு தரப்பும் நேற்று எடுத்துக்கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், இன்று 12 மணிநேர மனிதாபிமான போர நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க இணங்கியுள்ளன.
கடந்த சிலநாட்களில் ரஷயாவின் படைநகர் பெரிய அளவில் இல்லையென்ற போதிலும், வார இறுதிக்குள் ரஷ்யர்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாளை , வியாழக் கிழமை துருக்கியில் உக்ரேனிய வெளியுறவு மந்திரி குலேபாவிற்கும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் ஹோமோனிமஸ் லாவ்ரோவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நிகழவுள்ளது. படையெடுப்பு தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான மூன்றுகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள போதிலும், இதுவே முதலாவது உயர்மட்ட சந்திப்பாக இருப்பதனால் பலத்த எதிர்பார்பு உருவாகியுள்ளது.
உக்ரைன் இராணுவத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோ 10 மில்லியன் நன்கொடை !
இது இவ்வாறிருக்க, பல நாடுகளால் ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துத் தடைகளுக்கும் அனைத்தும் பதிலளிக்கப்படாமல் போகாது. "ரஷ்யாவின் எதிர்வினை விரைவாகவும், சிந்தனையுடனும் இருக்கும் மற்றும் மிகவும் உணர்ச்சிகரமான பகுதிகளில் தாக்கும்" என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார ஒத்துழைப்புத் துறையின் இயக்குனர் டிமிட்ரி பிரிச்செவ்ஸ்கி, ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கடந்த பதினான்கு நாள் யுத்தத்தில் ரஷயப்படைகள் பாரிய இழப்புக்களைச் சந்திதுள்ளதாக உக்ரைனும், அமெரிக்காவும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. குறைந்தது 10,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவும், அதையே 12 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளன. போர் நிலவரம் குறித்து பொய்யான பரப்புரைகள் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஐ.நா புள்ளிவிவரங்களின்படி, கடந்த இரு வாரங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போர் நிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.