இத்தாலியின் லினாத்தே விமான நிலையத்திலிருந்து, சார்த்தீனியாத் தீவு நோக்கி, கடந்த ஞாயிறு பிற்பகல் பறந்த சிறிய ரக தனியார் விமானம் ஒன்று, மிலானோவுக்குச் சமீபமாக, சென் டொனாடோ நகரில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில், விமானத்தை ஒட்டிய ருமேனிய கோடீஸ்வரர் டான் பெட்ரெஸ்குவாட், மற்றும் அவரது மனைவியும் மகனும் மேலும் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
ஒற்றை எஞ்சின் கொண்ட பிலடஸ் பிசி -12 சிறிய ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், மிலானோவிற்குத் தென்கிழக்கில் உள்ள சான் டொனாடோ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. புதுப்பிக்கப்படும் அலுவலக கட்டிடமொன்றின் மீது விழுந்து நொறுங்குவதற்கு முன்பே, விமானம் தீப்பிடித்து எரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் அப் சேவைகள் முடக்கம்
ஜேர்மனிய பிரஜா உரிமை கொண்ட 68 வயதுடைய பெட்ரெஸ், ருமேனியாவின் பணக்காரர்களில் ஒருவர். அவர் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார். மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வணிக வளாகங்களின் சொந்தக்காரர் எனத் தெரிய வருகிறது.
ஓமானை தாக்கிய ஷாஹீன் சூறாவளி : அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை
ஆளில்லாக் கட்டிடத்தின் மீது விமானம் விழுந்ததினால் மேலதிக உயிரிழப்புக்கள் இல்லாத போதும், அருகில் நின்ற பல வாகனங்கள் தீயில் எரிந்து போனதாகவும், விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.