இத்தாலியின் பீட்மாண்ட் மலைகளில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் 14 பேர் கொல்லப்பட்ட விசாரணையில் மூன்று பேரை கைது செய்ததாக இத்தாலிய போலீசார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.
கேபிள் காரை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள மூன்று பேர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கேபிள் முறிந்தபோது, அவசரகால பிரேக்கை வேண்டுமென்றே செயலிழக்கச் செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பீட்மாண்டின் வடமேற்கு பிராந்தியத்தில் மாகியோர் ஏரிக்கு அருகாமையில் உள்ள அழகிய இடமான மொட்டரோனில் கேபிள் காரில் பயணித்த 15 பேரில் 14 பேர் கொல்லப்பட்டனர். தற்போது ஆபத்தான நிலையில் உள்ள ஐந்து வயது சிறுவன் மட்டுமே உயிர் பிழைத்தான்.
சுவிற்சர்லாந்து கோவிட் - 19 தொற்றிலிருந்து இயல்புநிலையை நோக்கி பயனிக்கத் தொடங்குகிறது !
மூன்று சந்தேகநபர்களும் வேண்டுமென்றே பிரேக்கை செயலிழக்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என இத்தாலிய செய்தி நிறுவனங்கள் மூன்று சந்தேக நபர்களையும் கேபிள் காரை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபெரோவி டெல் மொட்டரோனின் தலைவர் மற்றும் இரண்டு மேலாளர்கள் எனக் குறிப்பிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் போப் பிரான்சிஸ் உட்பட உலகெங்கிலும் இருந்து பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் மிகப் பெரிய நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் தலைவரான கோடகான்ஸ், இந்த விபத்து போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட “சமீபத்திய கடுமையான சம்பவம்” என்று கூறியதுடன், 2018 ல் ஜெனோவாவில் ஒரு பெரிய நெடுஞ்சாலை பாலத்தின் சரிவில் 43 பேர் கொல்லப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
விபத்துக்குறித்த செய்தி இணைப்பு : இத்தாலியில் மோசமான கேபிள் கார் விபத்து! : 14 பேர் பலி