சுவிற்சர்லாந்தின் மத்திய கூட்டாட்சி அரசு பெப்ரவரி 17ந் திகதி முதல் கோவிட் பாதுகாப்பு விதிகளை நீக்கியுள்ள போதிலும், சுவிற்சர்லாந்தில் நுழைவதற்கான பயண விதிகளின் தளர்வு EU/EFTA நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இடம்பெயர்வுக்கான மாநிலச் செயலகத்தின் (SEM) அறிக்ககைப்படி, மூன்றாம் நாட்டுப் பிரஜைகளுக்கான பயண விதிமுறைகள் இன்னமும் நடைமுறையில் உள்ளன.
ஐரோப்பியப் பிரஜைகள், வதிவிட அனுமததி அற்றவர்கள் சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியுடன் கடந்த 270 நாட்களுக்குள் செலுத்தப்பட்ட முழு நோய்த்தடுப்பு மருந்துக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
சுவிற்சர்லாந்து கோப்பி - சூடான விலையேற்றம் !
மாடர்னா, ஃபைசர், ஜான்சன் & ஜான்சன், சினோவாக், சினோபார்ம் மற்றும் கோவாக்சின் ஆகியன தற்போது சுவிற்சர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றைப் பெறாதவர்கள் சுவிட்சர்லாந்திற்குள் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிற்சர்லாந்திலிருந்து ஏனைய நாடுகளுக்குப் பயணம் செய்கையில், அந்நாட்டு நடைமுறைகளிலும் பெரும்பாலும் இந்த விதிமுறை கவனிக்கப்பெறும் .