இலவச படங்கள் சேமிப்பை தொடர்ந்து வழங்குவதாக முதலில் தெரிவித்த கூகுள் நிறுவனம் பின்னர் அதை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கு மாற்றாக சில சேவைகளை இங்கே பார்க்கலாம்.
முன்னர் டுபாக்ஸ் என அறியப்பட்ட டெரா பாக்ஸ் இரண்டாவது சிறந்த கூகுள் புகைப்பட மாற்றாக கருதப்படுகிறது. பயன்பாடு 1TB அல்லது 1000GB இலவச சேமிப்பிடத்தை வழங்குகிறது. மற்றும் சேமிப்பகத்தைப் பற்றி கவலைப்படாமல் இலவசமாகவே ஆயிரக்கணக்கான கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புறைகளை நீங்கள் பதிவேற்றலாம்.
இருப்பினும், தானாகவே வீடியோக்களை காப்புப் பிரதி எடுக்க உங்களுக்கு பிரீமியம் உறுப்பினர் தேவை. புகைப்படங்களுக்கு தானியங்கி காப்புப்பிரதி எடுக்கும் வசதி இலவசமாக செயல்படுத்த முடிகிறது .