free website hit counter

இன்ஸ்டகிராம் வணிகம் : பயன்பாடுகளும் சில தந்திரங்களும் 2

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உட்கார்ந்த இடத்திலிருந்தே வருமானம் ஈட்டித்தரும் தொழில்துறைகளில் கணனி முன் மணிக்கணக்கில் செலவழித்த காலம் கூட தற்போது மறைந்து

கைக்குள் ஒரு உலகம் போல நல்லதொரு ஸ்மாட் கைப்பேசி இருந்தால் போதும். எங்கேயும் எப்போதும் எந்நேரத்திலும் வருமானத்தை பெருக்கும் வாய்ப்பை சிறு தொடுதலில் நடத்திடலாம். ஆனால் அதற்கு நாம் பயன்படுத்தும் செயலியின் பயன்பாட்டையும் கையாளும் தந்திர நுணுக்கங்களையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

அதன் ஒரு பகுதியாகவே இன்ஸ்டகிராம் வணிக பயன்பாடுகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து சென்ற பகுதியில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வணிகக் கணக்கை காட்டிலும் தனிநபர் கணக்குகள் மூலம் உச்சம் அடையலாம் என பலர் கூறுகிறார்கள். இது உண்மையா இல்லையா என்றும் இது குறித்த ஆய்வு ஒன்று என்ன தெரிவிக்கிறது என்றும் பகுதியில் காணலாம்.

தனி நபர் கணக்கிற்கும் வணிக கணக்கிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. பொதுவாக தனிநபர் கணக்காளார்கள் தாங்கள் உயர்மட்டத்தை எட்டியதாக தெரிவிக்கிறார்கள். அதனால் வணிக கணக்கை விட இது சிறந்தது எனவும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதில் அவ்வளவு உண்மை இல்லை. அதுவும் இன்றைய நடைமுறையில் பலமற்றது. பேஸ்புக் வலைத்தளத்தில் இந்த கூற்று உண்மையாகிறது. அதாவது பேஸ்புக்கும் தனியார் மற்றும் வணிகம் என இரு வேறு தளங்களாக பயன்படுத்தப்படுவது அறிந்ததே. பேஸ்புக்கின் வணிக கணக்குகள் சென்றடையும் எல்லை மிகக் குறைவு எனப்படுகிறது.

இதேபோல் எதிர்காலத்தில் இன்ஸ்டகிராமும் பேஸ்புக்கைப்போல அதன் போக்கை மாற்றிக்கொள்ளலாம் என அச்சமும் சிலரிடம் நிலவுகிறது. எது எப்படியோ இன்றைய நிலவரத்தின் படி வணிக கணக்கு; தனிநபர் கணக்கு இரண்டுமே கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. இதன் தொடர்பாக 'TIE' எனும் இணையத்தளம் ஒன்று புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில்

வணிக கணக்கின் சராசரி ஈடுபாட்டு வீதம் : 6.7%
தனிநபர் கணக்கின் சராசரி ஈடுபாட்டு வீதம் : 7%

சராசரியாக, சிறுபான்மை வணிக கணக்குகள் உண்மையில் தனிப்பட்ட கணக்குகளை விட முன்னேற்றம் அடைந்துள்ளன எனலாம். மிகவும் சிறிய வித்தியாசம்தான் அதுவே பெரிய மாற்றம், வணிக கணக்கிற்கு எதிராக தனிப்பட்ட கணக்கிலும் இதேபோன்ற அணுகலை எதிர்பார்க்க வேண்டும்.

மொத்தம்

தனிநபர் கணக்கின் சராசரி ஈடுபாட்டு வீதம்: 7.07%
வணிக கணக்கின்சராசரி ஈடுபாட்டு வீதம்: 6.73%

0 - 1,000 பின்தொடர்பவர்களை கொண்ட கணக்குகள்

தனிநபர் கணக்கின் சராசரி ஈடுபாட்டு வீதம்: 12.73%
வணிக கணக்கின்சராசரி ஈடுபாட்டு வீதம் : 14.09%

1,000 - 10,000 பின்தொடர்பவர்களை கொண்ட கணக்குகள்

தனிநபர் கணக்கின் சராசரி ஈடுபாட்டு வீதம்: 8.34%
வணிக கணக்கின்சராசரி ஈடுபாட்டு வீதம் : 6.46%

10,000 - 100,000 பின்தொடர்பவர்களை கொண்ட கணக்குகள்

தனிநபர் கணக்கின் சராசரி ஈடுபாட்டு வீதம்: 4.94%
வணிக கணக்கின்சராசரி ஈடுபாட்டு வீதம் : 3.39%

2018 ஆம் ஆண்டின் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் படி ​​ஈடுபாட்டு விகிதம் வணிக கணக்கில் குறைந்திருப்பது, பார்வையாளர்கள் உண்மையில் குறைவான ஈடுபாடு கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல. இன்ஸ்டாகிராம் உள்ளடக்கத்தை குறைவான நபர்களுக்குக் காண்பிப்பதால்தான் இந்த வீதம்
குறைந்துள்ளது.

அடுத்த பகுதியில் இன்ஸ்டகிராமில் பதிவிடும் பதிவுகளை எத்தனை பேர் பார்வையிட்டனர். எவ்வளவு லைக்ஸ் கிடைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் ஒரு பதிவோ அல்லது குறிப்பிட்ட இன்ஸ்டகிராம் கணக்கு (அல்லது பக்கம்) மக்களிடையே சேர்ந்திருக்கிறது எனும் பகுப்பாய்வு குறித்து காண்போம்.

-4தமிழ்மீடியாவிற்காக தமிழில்: ஜெகா

மூலம் : jacob-le.com

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula