வாத நோய்களைப் போக்கும்- வாதமடக்கி
தாவரவியல் பெயர்- Clerodendron phlomidis
குடும்ப பெயர்- Verbenaceae
ஆங்கிலப் பெயர்- Sage glory bower
சிங்கள பெயர்- Agnimantha
சமஸ்கிருத பெயர்- Vataghni
வேறு பெயர்கள்- தழுதாழை, தக்காரி, நந்தக்காரி
பயன்படும் பகுதி-
இலை, வேர்
சுவை- கைப்பு, துவர்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு
வேதியியல் சத்துக்கள்-
Flavonoids
Scutellarein
Pectolinarin
d-mannitol
beta-sitosterol
Ceryl alcohol
Clerodin
Clerosterol
Clerodendrin A
மருத்துவ செய்கைகள்-
Alterative- உடல் தேற்றி
Astringent - துவர்ப்பி
தீரும் நோய்கள்-
பக்க வாதம் (Paralyze) முதலிய 80 வாதநோய்கள்- Nervous disorders
கபபீநிசம்
கிரந்தி
தேக குடைச்சல்
வயிற்றுவலி- Stomachache
கொலரா
பயன்படுத்தும் முறைகள்-
இலைச்சாறு அல்லது வேர்ச்சாற்றை எடுத்துச் சமவளவு விளக்கெண்ணெய் சேர்த்து, மேக வியாதிகளுக்குக் (skin disease) கொடுத்து வரலாம், அல்லது இலைச் சூரணத்தைத் (Powder) தனியாகக் கொடுக்கலாம்.
இலைச்சாறு எடுத்து அதில் 17ml வீதம் காலை, மாலை உள்ளுக்குக் கொடுக்கச் சுரத்தைத் (fever) தணிக்கும். இத்துடன், இலைச் சாற்றை மூக்கில் இரண்டொரு துளி விடலாம்.
இலையை நீரில் சேர்த்துக் காய்ச்சி வாதவலியுள்ள பாகங்களைக் கழுவலாம்.
இலைச்சூரணத்தை ஆளி எண்ணெய் விட்டுப் பிசைந்து சிறிது வெதுப்பிச் சூட்டுடன் வைத்துக் கட்ட நெறிக்கட்டிகள் கரையும்.
வேரை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, வாதப்பிடிப்புகளுக்குத் தடவி வரலாம் அல்லது இலையில் விளக்கெண்ணெய் தடவி வெதுப்பி வைத்துக் கட்டலாம்.
~சூர்யநிலா