இந்த வைரஸ் மேற்பரப்புக்களில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்?
கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மேற்பரப்பில் எவ்வளவு காலம் உயிர்வாழ்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே செயற்படுவதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் (கோவிட்-19 வைரஸ் குறித்த ஆரம்ப தகவல்கள் உட்பட) சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை மேற்பரப்பில் தொடர்ந்து இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெவ்வேறு நிலைமைகளின் கீழ் மாறுபடலாம் (உதாரணம்: மேற்பரப்பு வகை, வெப்பநிலை அல்லது சுற்றுச்சூழலின் ஈரப்பதம்).
ஒரு மேற்பரப்பு பாதிக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், வைரஸைக் கொல்ல எளிய கிருமிநாசினியைக் கொண்டு அதை சுத்தம் செய்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும். ஆல்கஹால் அடிப்படையிலான திரவத்தை உபயோகித்து உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
கோவிட்-19 பாதிக்கப் பட்டதாக அறியப் படும் ஒரு பிரதேசத்தில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வது பாதுகாப்பானதா?
ஆம். பாதிக்கப்பட்ட நபர் வணிகப் பொருட்களை மாசுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் ஒரு தொகுப்பிலிருந்து நகர்த்தப்பட்டு, பயணிக்கப்பட்டு தொற்றுவது என்பது வெவ்வேறு நிலைமைகள் மற்றும் வெப்பநிலைக்கு உட்பட்டது என்ற போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட அது தொற்றுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும். இது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப் படுகின்றன.
கோவிட்-19 தொற்றினால் மோசமாகப் பாதிக்கப் படாது இருக்க நான் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் அல்லது பழக்க வழக்கங்கள் ஏதும் உள்ளனவா?
பின்வரும் நடவடிக்கைகள் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக வலிமையான விளைவை ஏற்படுத்தாத அதேநேரம் உங்களை ஓரளவு பாதிக்கக் கூடியதே ஆகும்.
1.புகை பிடித்தல்
2.பல முகக் கவசங்களை ஒன்றாக அணிதல்
3.ஆண்டிபயோட்டிக்ஸ் எடுத்தல் (பகுதி 3 ஐப் பார்வையிடுக)
எவ்வாறாயினும், உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மிகவும் கடுமையான தொற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க மருத்துவ உதவியை நாடுங்கள், மேலும் உங்கள் சமீபத்திய பயண வரலாற்றை உங்கள் சுகாதார வழங்குனருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
நன்றி.... நிறைவு...
-4தமிழ்மீடியாவுக்காக நவன்