free website hit counter

தொலைக் காட்சி தொழில்துறையின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் விதமாக மாறி வரும் YouTube பாவனை வீதம்!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகில் மிகப் பெரிய திரைத் தொழில் துறையான ஹாலிவுட் உட்பட பல ஊடகங்களில் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய இணைய சமூக ஊடகமாக YouTube சேனல் மாறி வருகின்றது.

இது மனித அறிவியலின் பெரும்பாலான தகவல்களை மிக இலகுவாக மிகப் பெருமளவு மக்களிடையே கொண்டு சேர்க்கும் சாதனமாகவும் மாறியுள்ளது. உதாரணமாக அமேசான் தளத்தின் தாபகரான ஜெஃப் பெசொஸ் தனது ராக்கெட்டு நிறுவனமான Blue Origin நிறுவனத்தின் விளம்பரத்துக்காகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ அல்லது பத்திரிகைகளையோ நாடாது டிம் டாட் என்பவரின் பிரபல YouTube சேனலான 'The Everyday Astronaut' இனை நாடியுள்ளார்.

ஒரு தசாப்தத்துக்கு முன்பு இதே அமேசன் தாபகர் தான் தனது விளம்பரங்களை தொலைக் காட்சி ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் Blue Origin தொழிற்சாலைக்கு நேரில் சென்று விபரங்களை சேகரித்ததன் பின்பே டிம் டாட் தனது YouTube சேனலில் வெளியான குறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த விளம்பரத்தை 1.6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர். YouTube மாத்திரமன்றி Spotify போன்ற Podcasting சமூக ஊடகங்களும், OTT தளங்களூம், செயற்கை நுண்ணறிவு (AI) இனால் கட்டுப் படுத்தப் படும் பல APP களும் கூட தொலைக் காட்சி மற்றும் வானொலிக்கு மாற்று ஊடகங்களாக அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன.

சமீபத்திய கணக்கெடுப்பில் அமெரிக்கர்கள் பார்க்கும் தொலைக் காட்சி நிகழ்வுகளில் 10% வீதத்தை YouTube ஆக்கிரமித்திருப்பதாகவும், OTT தளங்களுக்கு இணையாக திரைப் படங்களை விற்பது அல்லது வாடகைக்கு விடுவது மற்றும் Trailer, Teaser போன்றவற்றை முன்கூட்டியே வெளியிடுவது போன்றவற்றின் மூலம் சுயமாகப் படம் தயாரிப்பவர்களின் படைப்புக்கள் மாத்திரமே ஒவ்வொரு மாதமும் 2.5 பில்லியன் பார்வையாளர்களை சென்றடைவதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு Youtube இல் யார் வேண்டுமென்றாலும், என்ன வகையான வீடியோ என்றாலும் இலவசமாக எத்தனை தடவை வேண்டுமானாலும் Upload செய்து கொள்ள முடிவதும் சற்று அச்சுறுத்தலாகவே உள்ளது. ஆயினும் படத்தயாரிப்பாளரின் கோரிக்கைக்கு ஏற்ப YouTube தலைமையகம் சர்ச்சைக்குரிய வீடியோக்களை எடிட் செய்தல் அல்லது நீக்குதல் போன்ற பதில் நடவடிக்கைகளும் எடுக்கின்றது. மேலும் பல இலவச YouTube சேனல்களில் விளம்பரங்களையும் இடைக்கிடையே சேர்த்து வெளியிடுகின்றது.

இன்றைய நிலவரத்தில் அதிதிறன் பார்வைத் திறன் உள்ள கமெராக்கள் மற்றும் டிரோன்கள் போன்றவை சந்தையில் மலிவாகக் கிடைக்கின்றன. மேலும் சக்தி வாய்ந்த வீடியோ எடிட்டிங் சாஃப்ட்வேர்கள் இப்போது தரம் குறைந்த லேப்டாப்பில் கூட வேலை செய்கின்றன. இதனால் யார் வேண்டுமானாலும் தமது கற்பனைத் திறனுக்கு ஏற்ப ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் விதத்தில் திரைப் படம் எடுக்க முடியும் என்ற சூழல் காணப்படுகின்றது. இதில் மிகச் சிறந்த படைப்பாளிகளுக்கு YouTube ஒரு முக்கிய அடித்தளமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula