free website hit counter

எமது பிரபஞ்சத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் இரவு வானம் வெளிச்சமாக இல்லை?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தக் கேள்வியை வானியலில் ஆல்பெர்ஸ் முரண்பாடு (Olber's Paradox) என்பர். இக்கேள்வியை முதலில் எழுப்பியது ஆல்பெர் என்ற அறிஞர் என்பதால் இந்த சர்ச்சைக்கு அவர் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

1920 ஆமாண்டளவிலேயே இந்தக் கேள்விக்கு தர்க்க ரீதியிலான விடை பெறப்பட்டது. அது தொடர்பான விளக்கத்தை இப்போது காண்போம்.

முதலில் இந்த முரண்பாட்டை தெளிவாக அணுகுவோம். எமது பிரபஞ்சம் முடிவிலி என்றால் அதன் எல்லாத் திசைகளிலும் நாம் பூமியில் இருந்து நோக்கும் போது ஏதாவது ஒரு நட்சத்திரம் தென்படத் தானே வேண்டும். அப்படியானால் எமது இரவு வானம் முழுதும் பகலை விட வெளிச்சமாக இருக்க வேண்டுமே.. ஆனால் ஏன் அவ்வாறு இருப்பதில்லை. இதற்குக் காரணம் எமது பிரபஞ்சம் முடிவிலி மடங்கு வெளியைக் (Space) ஐக் கொண்டுள்ள போதும் அது முடிவிலி மடங்கு காலத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதே ஆகும். இன்னும் தெளிவாகப் பார்த்தால், நாம் இப்போது பூமியில் இருந்து விண்ணைப் பார்க்கும் மிகப் பெரும்பான்மையான திசைகளில் எமது பிரபஞ்சம் தோன்றிய பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னதான ஒரு இருட்டான நிலையைத் தான் பார்க்கின்றோம். இத்திசைகளில் சடப்பொருள் மிகவும் குளிர்ச்சியடைந்து ஒளியை வெளியிடாத நிலையை அடைந்து விட்டதான வெளியைத் தான் நாம் பார்க்கின்றோம். இதை ஆங்கிலத்தில் CMB (Cosmic Microwave Background) என்று அழைப்பர்.

எமது கண்களால் பூரணமாக கருப்பு நிறத்தில் காணப் படும் 300 000 வருடங்கள் பழமையான இந்த அகில நுண்ணலைப் பின்புலத்தின் படம் பிளாங் செய்மதியால் (Plank Satellite) இனால் புகைப் படம் எடுக்கப் பட்டு கணணியால் வடிவமைக்கப் பட்டதாகும். இந்த கதிர்வீச்சானது பிரபஞ்சம் தோன்றி 400 000 வருடங்களுக்குப் பிறகு வெளிப்பட்டதாகும். இக்காலப் பகுதியில் எந்தவொரு நட்சத்திரமும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 13.7 பில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்த இந்தக் கதிர் வீச்சினால் தான் இன்று மனிதனால் பிரபஞ்சத்தின் வயது திருத்தமாகக் கணிக்கப் பட்டுள்ளது.

இதனுடன் ஒப்பிடுகையில் இந்த 400 000 வருடங்கள் என்பது ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்துக்குச் சமன் என்பது குறிப்பிடத்தக்கது.

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula