free website hit counter

சந்திரயான் 2 வெற்றிக்கு இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து! : சந்திரயான் ஆய்வுத் திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திங்கட்கிழமை மதியம் 2:43 மணிக்கு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என்ற மூன்று நிலைகளைக் கொண்ட சந்திராயன் 2 என்ற விண்கலம் வெற்றிகரமாக இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

சுமார் 48 நாட்கள் பயணித்து நிலவின் தென் துருவத்தை முதன் முறையாக ஆய்வு செய்வுள்ள இந்த இஸ்ரோவின் 978 கோடி ரூபாய் செலவிலான செயற்திட்டத்துக்கு நாசா டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

மறுபுறம் சந்திரயான் 2 திட்டத்தை சாத்தியமாக்கிய் அனைவருக்கும் நன்றிகளைப் பகிர்ந்து கொண்ட இஸ்ரோ தலைமை அதிகாரி சிவன் முக்கிய பணிகளாக இன்னும் ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக இந்த விண்கலம் விண்ணில் பயணித்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி அதில் இருந்து பிரக்யான் என்ற வாகனம் நிலவில் உலாவ ஆரம்பிக்கும் 15 நிமிடங்கள் தான் இந்தத் திட்டத்தில் முக்கியாமான அம்சங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டம் குறித்து பிபிசிக்கு தகவல் அளித்த விண்வெளி அறிவியலாளர் டி எஸ் சுப்ரமணியன் இவ்வாறு தெரிவித்தார். 'நிலவின் சுற்று வட்டப் பாதையை இவ்விண்கலம் அடைந்த பின்பு சந்திராயன் 2 செயற்கைக் கோள் அதில் பொருத்தப் பட்டுள்ள 8 உணரிகள் (சென்சார்கள்) உதவி கொண்டு நிலவின் பல்வேறு பகுதிகளைப் படம் பிடித்து உடனுக்குடன் அனுப்பவுள்ளதுடன் தண்ணீர், மற்றும் ஹீலியம் இருப்பு, வளிமண்டல அமைப்பு, பனிக்கட்டிகள், நிலவு நடுக்கம் போன்ற விடயங்கள் குறித்து சுமார் ஓராண்டுக்குத் தீவிர ஆய்வை மேற்கொள்ளும்.' என்றார்.

இதேவேளை 48 நாட்கள் கழித்து செப்டம்பர் முதல் வாரம் சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து 1400 கிலோ எடையும் 4 உணரிகளையும் கொண்ட விக்ரம் என்ற லேண்டர் நிலவின் மேற்பரப்பை ஸ்கேன் செய்தவாறே உரிய இடத்தில் மெதுவாகத் தரையிறங்கவுள்ளது. 4 1/2 மணித்தியாலம் கழித்து பிரக்யான் என்ற ஆறு சக்கர உலாவி (ரோவர்) அதிலிருந்து வெளியேறி பல மீட்டர்கள் நகர்ந்து ஆய்வு செய்யவுள்ளது. இதில் இரு உணரிகளும் வேறுபல கருவிகளும் உள்ளன.

இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் உலவி என்பவற்றின் ஆய்வுக் காலம் கிட்டத்தட்ட ஒரு நிலவு நாள் அதாவது 14 பூமி நாட்கள் தான் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula