free website hit counter

சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் படம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தரமான பொழுதுபோக்கு படங்களில் நடிக்கும் அதே நேரம், தரமான படங்களைத்
தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அவரது முதல் தயாரிப்பாக உருவான படம் ‘கனா’. ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ‘நெருப்புடா..!’ பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை கதாபாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக கௌரவ தோற்றத்திலும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருமித்த பாரட்டுக்களை பெற்று, பிரமாண்ட வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் மொழிகள் தாண்டியும் பாராட்டு பெற்றது. இப்படம் வெளியான 2018 ஆம் வருடத்தில் பல விருதுகளையும் வென்றது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வரும் மார்ச் 18 ஆம் தேதி அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மொழியில் சீன மொழி சப் டைட்டிலுடனும், நேரடி சீன மொழியிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர். முன்னதாகவே சீனாவில் வெளியாகவேண்டிய இப்படம் கோவிட் காரணங்களால் இப்போது வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு சீனாவில் வெளியாகும் தமிழ்ப்படமாக ‘கனா’ இருக்கும் என்கிறது கோலிவுட்! Yi Shi Films சார்பில் Mr. AlexiWoo, Ms. SarinaYuanfeiWang ஆகியோர் ‘கனா’ படத்தின் சீன உரிமையைப் பெற்று வெளியிடுகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula