வெளிநாட்டு சொகுசுக் காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரைக் கண்டித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றனம். மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய்.
நடந்துமுடிந்த தேர்ந்தலில் கருப்பு சிவப்பு வண்ண சைக்கிளில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்து வாக்கு செலுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கிடையில் ‘தன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்திய ஒன்றிய அரசுக்கு எதிராகவே அவர் இவ்வாறு வாக்களிக்க வந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக கூறப்படும் சில நிதிமன்ற நீதிபதிகளிடம் விஜய் சம்மந்தபட்ட பட வழக்குகளோ, சர்ச்சைகளோ சிக்காமல் இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் அவரது வருமான வரி சோதனையின்போது கூறிவந்தனர். அது தற்போது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது.
இத்தாலியின் வெற்றியும் விளைவும் !
விஜய் சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்தார். அந்தக் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி விஜய் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. “சமூக நீதிக்கு பாடுபடுவதாக படத்தில் தங்களைப் பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நிஜவாழ்விலும் உண்மையான ஹீரோக்களாக நடிகர்கள் இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. விஜய் போன்ற நடிகர்களுக்கு கூறுவது ‘வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு’ எனவும் காட்டமாகக அறிவுறுத்தி அபராதம் வித்துள்ளது.
- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை