ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை வரிசையாக இயக்கினார்.
இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதேநேரம் அட்லி சம்பள மற்றும் சர்ச்சைகளில் களமாடிக் கொண்டிருந்தார். அதாவது 13 கோடி சம்பளம் கேட்கிறார், அதிக செலவு வைக்கிறார், எடுக்கிற காட்சிகளில் பலதையும் பயன்படுத்துவதில்லை, பழைய படங்களை காப்பியடிக்கிறார் என அட்லி மீது நிறைய புகார்கள் கூறப்பட்டாலும் கோலிவுட்டில் டாப் 10 டைரக்டர்களில் இடம் பிடித்திருக்கிறார்.
கடைசியாக வெளியான பிகில் படத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்குவதாக கூறப்பட்டது. அதனை வதந்தி என பலரும் கூறி கிண்டல் செய்துவந்த நிலையில் அதனை உண்மையாக்கினார் அட்லி. தொடர் தோல்விகளில் இருந்த ஷாருக் கான் அட்லியை இயக்குனராக தேர்வு செய்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். உண்மையாவே இவர்கள் இணையும் படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கியது. கூடவே நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வந்தார்கள். ஆனால் முதல் ஷெட்யூல்டுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. காரணம், ஷாருக்கானின் மகன் போதை மருந்து உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற சேதி வந்தது.
ஆனா இப்போ ஷாருக் கான் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் அட்லீ படத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுனால் அட்லி ஷாருக்கான் திரைப்படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டதாக மும்பை இணைய ஊடகங்களில் செய்திகள் முளைத்துள்ளன. இதை உண்மையாக்குவதுபோல, அட்லி தனது இன்டாகிராமில் , குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் புகைப்படத்தை பதிவிட்டு, அதன் கீழ் கேப்ஷனாக, “உங்களைத் தவறாக வழி நடத்தியவர்கள், அதற்காக வருத்தப்படும் காலம் ஒன்று வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் ஷாருக் கானின் முடிவை குறிப்பிட்டுள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையிலே இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட்டில் ஒரு மார்க்கெட்டை பிடிக்கலாம் என்று காத்திருந்த நயன்தாராவும் அப்செடாகி இருப்பதாகவும் அவருக்கு விக்னேஷ் சிவன் ‘நாமே இந்திப் படம் தயாரித்து இயக்கலாம்’ என ஆறுதல் கூறி வருதாகவும் நயன் வட்டாரத் தகவல் !