அன்மையில் துபாய் சென்று திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை நேரில் சந்திப்பதற்காக டெல்லி செல்கின்றார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், நிவாரணத் தொகை உள்ளிட்ட விடயங்களை பிரதமருடன் பேசுவதோடு, மாநில உரிமைகள் தொடர்பில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிரவும் இந்த விஜயத்தின்போது, டெல்லியில்உருவாகியுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின் திறப்புவிழாவினையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தவுள்ளார் எனத் தெரிய வருகிறது. ஏப்ரல் 2ந் திகதி நடைபெறும் இத் திறப்புவிழாவிற்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.