தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றதில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் எனும் மருத்துவத்தில் இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு எதிரான மசோதாவை தமிழக சட்டசபை இன்று ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டது.
இதன் போது ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றுவது இது இரண்டாவது முறையாகும். நுழைவுத் தேர்வை ரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகியவற்றில் சேர்க்கை நடத்துவதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அ.தி.மு.க - தி.மு.க இடையே காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.