தமிழகத்தில் வரும் செப். 15 ஆம் திகதிக்குள் நடத்தபடாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடத்தபடாமல் இருந்த தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை வரும் செப்.15க்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய தமிழகத்தை சேர்ந்த இம்மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தபடவில்லை. எனவே உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்தது. இதனையடுத்து செப் 15க்குள் விடுபட்டு போன நகர்புற மற்றும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.