புதன்கிழமையன்று, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் சட்டமியற்றுபவர்கள் பகுதிக்குள் இருவர் குதித்ததை தொலைக்காட்சி சேனல்கள் காட்டுகின்றன.
சிஎன்என் நியூஸ் 18, கருப்பு ஜாக்கெட் அணிந்த இரு நபர்கள் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சட்டமியற்றுபவர்கள் அமரும் பகுதிக்கு குதித்து, சட்டமியற்றுபவர்களின் மேசைகள் மீது ஏறுவதைக் காட்டியது. மேலும் அவர்கள் மஞ்சள் நிற புகை குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “இந்த நாளில், இந்திய நாடாளுமன்றம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சட்டமியற்றுபவர் கௌரவ் கோகோய், சந்தேகப்படும்படியான இருவரில் ஒருவர் கோஷம் எழுப்பியதாகக் கூறினார். மற்ற சட்டமியற்றுபவர்கள் அறைகளில் ஒருவித ஒலியைத் தொடர்ந்து புகை வந்ததாகக் கூறினர்.
பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிஎன்என் நியூஸ் 18 சேனல் தெரிவித்துள்ளது.
இச்சந்தர்பத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு இந்தியாவின் பாராளுமன்ற வளாகத்தின் மீதான தாக்குதலில் ஐந்து துப்பாக்கி ஏந்தியவர்கள் உட்பட ஒரு டஜன் பேர் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளின் செயல் என புது டெல்லி குற்றம் சாட்டியது.