நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சியினர் சைக்கிளில் பேரணியாக சென்றனர். எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இப்பேரணி நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளையில் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பை நடவடிக்கைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ் உளவு , விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் சபையை நடத்த விடாமல் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. எனினும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு அமளிக்கு மத்தியிலும் நிறைவேற்றப்படுகின்றன.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 14 எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்த கூட்டம் இடம்பெற்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்த நிலைப்பாடை எடுப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தையடுத்து பெட் ரோல்- டீசல் விலை உயர்வை சுட்டிக் காட்டும் வகையில் பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் சைக்கிளில் பயணிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த பேரணியில் ராகுல் காந்தியுடன் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்கட்சியினரால் தொடர்ந்து நடைபெறாமல் செல்வதால் முற்றிலும் சபை நடவடிக்கைகள் முடங்கியிருப்பதாகவும் இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.