உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அவர் டுவிட்டர் வழியே விடுத்துள்ள செய்தியில்,
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! இந்த சிறப்பான நாள், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கான மனநிலையை அதிகரிக்கட்டும். ஏசு கிறிஸ்துவின் உன்னத எண்ணங்கள் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்ற வலியுறுத்தியது ஆகியவற்றை நாம் நினைவுகூர்வோம்.
என்று கூறியுள்ளார்.