பாரிஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார்.
மூன்று நாடுகளின் ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில் டென்மார்க்கில் இருந்து பாரிஸ் வந்தடைந்த பிரதமர் மோடி, ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோனை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேற்று புதன்கிழமை சந்தித்து, இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தார்.
இந்த சந்திப்பு இந்தியா-பிரான்ஸ் நட்புறவுக்கு உத்வேகம் சேர்க்கும்” என்று பிரதமர் மோடியும், மேக்ரானும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த புகைப்படத்துடன் பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
புதன்கிழமை கோபன்ஹேகனில் பிரதமர் மோடி மற்றும் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அவரது சகாக்கள் கலந்துகொண்ட இரண்டாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டிலும் உக்ரைன் பிரச்சினை முக்கிய இடத்தைப் பிடித்தது குறிப்பிடதக்கது.