தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 338 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கிய பின்னர் 10 நிமிடம் அதை படிக்கநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்ய கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் துவக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7 ஆயிரத்து 577 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 376 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளில் 3 ஆயிரத்து 228 மாணவர்களும், 2 ஆயிரத்து 607 மாணவிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 835 பேர் இன்று தேர்வு எழுத உள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் தேர்வெழுத உள்ளனர்.