பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக இணையத்தில் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பணம் பதுக்கியிருப்பதை சுட்டிக்காடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியவைச் சேர்ந்த 500 பெயர்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்ட ஆவணங்களில் குறைந்தது 380 இந்தியர்கள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் இதுவரை சுமார் 60 முக்கிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை ஆங்கில பத்திரிகை ஒன்று சரிபார்த்து உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாதததையும் கோடிக்கணக்கான பணத்தை ரகசியமாக வைத்திருப்பதையும் பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவல்களில் அம்பலமாகியுள்ளன.
இந்நிலையில் முன்னனி கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் வெளிநாடுகளில் கோடிக் கோடியாக பணம் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியானதையடுத்து முதலீடுகள் வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்ட விதி மீறல்கள் எதுவும் இல்லை என்றும் சச்சின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.