free website hit counter

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை - தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகள் தானாக விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்ற பதிவாளர் பரிசீலித்து தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வார். அதன் பின்னர் அந்த மனுக்களை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி, அம்மனுக்களை உரிய அமர்வில் பட்டியலிடுமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிப்பார்.

இந்த நடைமுறையில் காலதாமதம் ஏற்படும் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகும் வக்கீல் தங்களது மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சுப்ரீம் கோர்ட்டில் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

மேலும், அவரச வழக்குகள் இருந்தால் நாங்கள் குறிப்பிடுவோம், பிற வழக்குகள் அனைத்தும் தானாக பட்டியலிடப்படும். இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: