சென்னை: பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்த போதும்
கடந்த 14 நாட்களாக எதுவித மாற்றங்களின்றி விற்பனையாகியது. இன்று 102.49 ரூபாய்க்கு ஒரு லீட்டர் பெட்ரோலும் 94.39 ரூபாய்க்கு ஒரு லீட்டர் டீசலும் சென்னையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டௌன் காலத்திலும் தினசரி பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்தது கொண்டே சென்றது. மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பினாலே இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து செல்கின்றன என மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லீட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பெட்ரோல் லீட்டருக்கு 103 ரூபாய் வரை விற்பனையாகி வருகின்றது.
இந்த விலை அதிகரிப்பினால் பொது மக்கள், வாகன ஓட்டுனர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி எதிர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்காவிட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்