இந்தியாவில் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் அனல் மின் நிலையங்கள் நிலக்கரி தட்டுபாடு காரணமாக மின் உற்பத்தியை நிறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியின் 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ளதும். விலையேற்றம் காரணமாக நிலக்கரியை இறக்குமதி செய்யவும் முடியாதநிலை உள்ளது.
இந்நிலையில் மிக குறைந்த அளவே நிலக்கரி கையிருப்பு இருப்பதால் டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமருக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.