தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க முடியாது: டி.கே. சிவக்குமார்
அதையும் முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் கூடுகிறது. தமிழக அரசு இதில் கர்நாடகா மீது புகார் அளிக்க இருக்கிறது. இதற்கிடையே தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கூற கர்நாடகா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் திட்டவட்டாக தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.