தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி அதிகாரத்தை வழங்க, பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிகளின் தன்னாட்சி வழிகாட்டுதல்களை திருத்தி அமைத்து உள்ளது.
'ஏ' சான்றிதழை பெற்ற தன்னாட்சி கல்லூரிகள் 15 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் தன்னாட்சி அந்தஸ்தை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நிரந்தர தன்னாட்சி அந்தஸ்தை பெற அதற்கு தகுதி உண்டு.
இந்த தன்னாட்சி கல்லூரிகள் புதிய படிப்புகளை பல்கலைக்கழகத்தின் அனுமதி இன்றி தொடங்க முடியும். இதுபோன்ற திருத்தங்களை பல்கலைக்கழக மானியக்குழு செய்துள்ளது. தற்போது நாட்டில் சுமார் 500 கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.