தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லியில், பாரதப்பிரதமர் நரேந்திரமோடியை நேற்று நேரில் சந்தித்தார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதன் பின்னதாக நடைபெற்ற முதலும், முக்கியத்துவம் மிக்கதுமான சந்திப்பாகவும், மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் இது அமைந்தது.
சுமார் அரை மணிநேரம் வரையில் அமைந்த இச் சந்திப்பின் போது, தமிழகத்தின் பல்வேறு 25 கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், அதனை எழுத்து மூலமான மனுவாகவும் நேரில் சமர்ப்பித்தார்..
இரு நாள் உத்தியோகபூர்வமாக டெல்லி சென்றுள்ள முதல்வர், நிகழ்ச்சி நிரலின்படி, இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இன்று காலை 10 மணியளவில் சோனியா காந்தியின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில், முதல்வருடன் அவரது மனைவி துர்காவும் உடனிருந்தார்.
இருவரையும் வரவேற்றுக் கொண்ட சோனியா காந்திக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சோனியாக காந்தியும், ராகுல் காந்தியும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த இருநாள் விஜயத்தின் போது , தலைநகரில் மேலும் பல அரசியற் தலைவர்களைச் சந்தித் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகின்றார்