இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவைடைந்தது. இந்த தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் உட்பட 259 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்காளர்கள் 3 ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, திரிபுரா தேர்தலில் சுமார் 81 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு இறுதி விவரம் இன்றிரவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.