தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்.
தமிழ் நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.
புதிய கண்காணிப்பு அதிகாரிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, டிட்கோ நிர்வாகம், நெடுஞ்சாலைகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதார திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மக்கள் நல்வாழ்வுத் துறைகளை சேர்ந்த பல்வேறு திட்டங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வர்.