சுவிற்சர்லாந்தில் ஜுலை முதல்வாரத்தில் கோவிட் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை இரட்டடிப்பாகியுள்ளதாக மத்திய கூட்டாட்சி அரசின் சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜூலை 2 முதல் 5 வரையிலான 72 மணி நேர காலப்பகுதியில் மட்டும், சுவிற்சர்லாந்தில் 449 கூடுதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன என்று FOPH ன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் இறுதி வாரத்தில் (28 திங்கள்), இந்த எண்ணிக்கை 239 ஆக இருந்தது. ஒரு வார இடைவெளியில் இத்தகைய அதிகரிப்பு அடுத்த அலையின் தொடக்கத்தைக் குறிக்க முடியுமா எனத் திடமாகச் சொல்ல முடியாத போதும், தொற்றின் இனப்பெருக்கம் விகிதமும் 1 ஐத் தாண்டியுள்ளதாகவும், முந்தைய வாரங்களை விட வைரஸ் வேகமாக பரவுவதை இது குறிப்பதாகவும் கருதமுடியும்.
டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாகவே தற்போது அதிகமான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும், ஜூன் மாத இறுதியில் சுவிற்சர்லாந்தின் மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது கிட்டத்தட்ட 29 சதவீத தொற்றுக்கள் டெல்டா மாறுபாட்டினால் ஏற்படுகின்றன என்றும் FOPH தெரிவித்துள்ளது.
சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணர்களின் கணிப்புகள் கோடைகாலத்தின் முடிவில் இந்த பிறழ்வு நாட்டில் அதிகம் காணப்படும் என்று ஏற்கனவே கணித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, ஏப்ரல் 2021 இல் அரசாங்கம் சுய பரிசோதனை கருவிகளை அறிமுகப்படுத்தியபோது, ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் மாதத்திற்கு ஐந்து இலவச சோதனை கருவிகள் வழங்கப்பட்டன. ஆயினும் இனி , கோவிட்டிற்கான முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அல்லது மீட்கப்பட்டவர்களுக்கு சுய நிர்வகிக்கும் சோதனைகள் இலவசமாக வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுவிஸ் தேசிய காற்பந்து அணிக்கு மரியாதை வரவேற்பு !