இத்தாலியில் கோவிட் தடுப்பூசிகள் புதிய சாதனையை எட்டியுள்ளதால் கோவிட் பெருந் தொற்றுநோய் வரும் வசந்த காலத்தில் முடிவுக்கு வரக் கூடும் என இத்தாலிய வைராலஜிஸ்ட் ஒருவர் எதிர்வு கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்கழமை 48,000 குழந்தைகள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 22,500 முதல் டோஸ்கள் உட்பட 686,000 - 77,500 முதல் டோஸ்கள், என்ற எண்ணிக்கையில், கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவதில் இத்தாலி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது என இத்தாலியின் கோவிட் -19 அவசர ஆணையர் பிரான்செஸ்கோ ஃபிக்லியோலோவால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் மக்கள் தொகையில் 86.5 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 க்கு எதிராக, முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தடுப்பூசி பிரச்சாரத்தின் முன்னேற்றம், இத்தாலியில் தொற்றுநோய்க்கு வரவிருக்கும் இறுதி திகதியை கணிக்கும் ஒரு கட்டத்திற்கு துரிதப்படுத்தப்படுத்தியுள்ளது.
"ஏற்கனவே வசந்த காலத்தில், 2022 ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கு இடையில், நாங்கள் நியாயமான முறையில் தொற்றுநோயிலிருந்து வெளியேறுவோம்" என்று ஜெனோவாவில் உள்ள தொற்று நோய்கள் கிளினிக்கின் இயக்குனர் மேட்டியோ பாசெட்டி புதன்கிழமை Rai radio1 வானொலிச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
" இத்தாலி முழுவதும் குறைந்தபட்சம் ஜனவரி 31ம் திகதி வரை கட்டாயமாக உள்ள முகமூடிகளை
விரைவில் நாங்கள் அகற்ற முடியும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் விரைவிலேயே எங்களிடம் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.