கடந்த வாரத்தில் ஜேர்மனியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்காக, 400 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதற்கு ஜெர்மன் ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று புதன்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கலின் அமைச்சரவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர உதவி வழங்க ஒப்புதல் அளித்ததுடன், வீடுகள், வணிகங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப பல பில்லியன்கள் தேவைப்படும் என்பதையும் கவனத்திற் கொண்டுள்ளது.
இந்தப் பெருவெள்ள அனர்த்தத்தில், ஜேர்மனியில் குறைந்தது 174 பேரும், ஐரோப்பாவில் மொத்தம் 201 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செவ்வாயன்று அதிபர் அங்கேலா மேக்கர் நேரில் விஜயம் செய்திருந்தார். அப்போது இழப்புகளைச் சந்தித்த குடிமக்களுக்கு அவசர உதவிக்கான வழியை அமைச்சர்கள் விரைவுபடுத்துவார்கள் என்று கூறினார்.