இத்தாலியில் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் கலாச்சார தளங்களுக்கு கிரீன்பாஸ் தேவை நீட்டிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னதாக, அதன் பயன்பாட்டின் விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அபராதம் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ளரங்க உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கச்சேரி அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள், தீம் பூங்காக்கள் மற்றும் பல பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரத் தளங்களுக்குள் நுழைவதற்கு இத்தாலிய அரசு தனது சுகாதாரப் பாஸை கட்டாயமாக்கியது.
கடந்த ஆறு மாதங்களில் கோவிட் -19 இலிருந்து மீட்கப்பட்டவர், அல்லது முந்தைய 48 மணிநேரத்தில் எதிர்மறையாக சோதனை செய்திருப்பவர், குறைந்தபட்சம் ஒரு டோஸுடன் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை சுகாதார சான்றிதழ் நிரூபிக்கிறது. இப்போதுள்ள சட்ட விதிகளின்படி, விதிமீறல் காணப்படின், € 400 முதல் € 1,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்
கொரோனா வைரஸ் நிலையை காட்டும் நடவடிக்கை இத்தாலி முழுவதும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது, ஆர்ப்பாட்டக்காரர்கள் இது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்று கூறி பாஸை ரத்து செய்யுமாறு கோரி வருகின்றனர். இதேவேளை, கோவிட் -19 இலிருந்து தடுப்பூசி, சோதனை, அல்லது மீட்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காண்பிப்பதைத் தவிர்ப்பதற்காக நூற்றுக்கணக்கான யூரோக்களுக்கு போலி கிறீன் பாஸ்கள் ஆன்லைனில் விற்கப்படுவதை கண்டறிந்த காவல்துறை, அத்தகைய ஆன்லைன் நெட்வொர்க்குகளை உடைத்து, தவறான சுகாதார சான்றிதழ்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்களை மூடிவிட்டது.
இதேவேளை, இதன் நடைமுறையிலும் பெருங் குழங்கள் உள்னன. இத்தாலி முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களை உள்ளடக்கியதாக கிரீன் பாஸ் விரிவுபடுத்தப்பட்டதால், வணிகர்கள் புதிய விதிகளை அமல்படுத்த போராட வேண்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பத்தின் மத்தியில் திருப்பி விடப்பட்டனர். அரசாங்கத்தின் VerificaC19 செயலியில் தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன. மற்ற நாடுகளின் சுகாதார சான்றிதழ்கள் மூலம் உருவாக்கப்பட்ட QR குறியீடுகளை ஸ்கேன் வணிக நிறுவனங்கள் ஸ்கேன் செய்கையில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஆயினும், சில பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே தங்கள் NHS செயலியுடன் வேலை செய்வதாக ஏற்கனவே கூறியதால் ஒரு தீர்வு விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தாலியின் வங்கி விடுமுறை (ஃபெராகோஸ்டோ) நெருங்குகையில், உள்துறை அமைச்சகம் கோவிட் எதிர்ப்பு விதிகளை அமல்படுத்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளதாக இத்தாலிய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த வார இறுதியில் விடுமுறை விடுதிகள், கடற்கரைகள் மற்றும் தெருக்களில் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது, ஏனெனில் இரவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் அதிக பொது இடங்களில் கூட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.உட்புறங்களில் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம், மற்றும் கிரீன் பாஸ் சரிபார்ப்பு போன்ற தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் அதிகாரிகள் குறிப்பாக கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.