சமீபத்தில் புத்தாண்டு தினத்தன்று தனது நாட்டு மக்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உரையாற்றிய போது, தற்போது நிலவும் பொருளாதார சூழலில், பொது மக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணுவாயுதங்கள் அல்ல' என்று தொனிப்பட உரையாற்றி இருந்தார்.
இந்த உரை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால் சில தினங்களுக்குள்ளேயே வடகொரியா மீண்டும் இன்று புதன்கிழமை ஏவுகணை சோதனை நடத்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நீண்ட தூர இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதித்திருப்பதாக தென்கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஜப்பானின் கடற்படடை தெரிவித்த தகவலில், குறித்த ஏவுகணையானது வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து புறப்பட்டு, 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜப்பானுக்கு சொந்தமான பொருளாதார மண்டல கடற்பரப்பில் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை ஜப்பானின் பாதுகாப்புத் துறையும் உறுதிப் படுத்தியுள்ளது.