உலக நாடுகளில் விலங்குகளுக்கு தீங்கிழைப்பதை எதிர்த்துப் போராட பல சட்டங்கள் இருந்தாலும், விலங்கினத்திற்கும் சம உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்கும் முதல் நாடு சுவிற்சர்லாந்து.
ஆம்! அதாவது அங்கு செல்லப்பிராணியாக 'ஒரே ஒரு' கினிப் பன்றியை( guinea pig) வளர்ப்பதற்கு அனுமதி இல்லை !
இதற்குக் காரணம், கினிப் பன்றி எனும் சிறிய பன்றிகள் தன் இன கூட்டத்துடன் வாழ்பவை; அவை சமூக இனங்கள் என சொல்லப்படுகிறது. கினிப் பன்றிகள் தன் ஆயுட்காலம் முழுவதும் மகிழ்ச்சியாகவும் தனிமையை உணராமல் இருக்க அதனுடை சமூக தொடர்பு தேவை, எனவே ஒரு கினிப் பன்றியை மட்டும் வளர்ப்பது அதன் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
கினிப் பன்றிகள் மிகவும் இயற்கை ஆர்வமுள்ளவை; ஆனால் தனிமையை விரும்பாதவை. எப்போதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இயங்குவதற்கு இந்த கினிப்பன்றிகளுக்கு திறந்த போதிய இடவசதியும் துணையாளர்களும் தேவை.
தமது உரிமையாளர்கள் மற்றும் துணையாளர்களுடன் நெருக்கமாகே இணைந்திருக்கும் கினிப் பன்றிகள் ஒன்றைப்பிரிந்து மற்றொன்று வாழாது; ஒன்று இறக்கும் சந்தர்ப்பத்தில் மற்றது இறந்துவிடுவதால் அதை வளர்க்கும் உரிமையாளருக்கு துயரம் என்பதாலுமே இந்த சட்டமானது ஒன்றை மட்டுமே வளர்ப்பதற்கு அங்கு அனுமதிக்கப்படவில்லை!
இதேவேளை தனிமையாகும் கினிப்பன்றிகளுக்கான துணையாளர்களை வாடகைக்கு விடும் சேவை நிறுவனம் ஒன்று தற்போது இயங்கிவருவதும் குறிப்பிடதக்கது.