நேபாளத்தின் மிகப் பெரிய அரசியல் கட்சியான நேபாலி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரதமர் ஷேர் பஹதுர் டெயுபாவை புதன்கிழமை மீண்டும் அக்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை வாபஸ்
7.3 ரிக்டர் அளவுடையை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று கிழக்கு இந்தோனேசியாவை செவ்வாய்க்கிழமை GMT நேரப்படி அதிகாலை 3:20 மணிக்கு தாக்கியதில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டுள்ளது.
ஒமைக்ரோன் வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள ரஷ்யா?
மிக மிக வேகமாகப் பரவும் தனது இயல்பு காரணமாக உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் இன் புதிய மாறுபாடான ஒமைக்ரோன் 3 ஆவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையேயும் பரவுவது கண்டு பிடிக்கப் பட்டிருப்பது அமெரிக்க ஆய்வாளர்களை சற்று கலக்கமடைய வைத்துள்ளது.
கிழக்கு சீனக் கடற்பரப்பில் கார்கோ கப்பல் மூழ்கியது! : 4 பேர் பலி, 7 பேர் மாயம்
ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு சீனாவின் ஷடோங் மாகாணத்தில் யண்டாய் நகருக்கு அருகே கடற்பரப்பில் ஒரு கார்கோ கப்பல் நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியது.
அமெரிக்காவில் மோசமான சூறாவளி! : ஜப்பானைத் தாக்கிய 5 ரிக்டர் நிலநடுக்கம்
அமெரிக்காவின் கெண்டக்கி, இல்லினாய்ஸ், உள்ளிட்ட 5 மாகாணங்களில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்கிய மிக மோசமான டோர்னிடோ எனும் சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பல நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுவதாக பேரிடர் முகாமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
2050 இற்குள் கார்பன் நடுநிலை எட்டும் ஒப்பந்தத்தில் பைடென் கைச்சாத்து!
புதன்கிழமை 2050 இற்குள் கார்பன் நடுநிலை நிலையை எட்டும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கைச்சாத்திட்டுள்ளார்.
ஜேர்மனியின் புதிய பிரதமராக ஒலாப் ஸ்கோல்ஸ் பதவியேற்பு!
ஜேர்மனியின் பிரதமராக சுமார் 16 ஆண்டுகள் பதவி வகித்த செல்வாக்கு மிக்க தலைவரான ஏஞ்சலா மேர்கெல் இன் பதவிக் காலம் முடிந்து நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார்.