2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் சுமார் 75,000 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
பெருமளவிலான இலங்கையர்கள் குவைத்திற்கு புலம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மொத்தம் 17,793 ஆக உள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையர்கள் தற்போது தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளை தேட முனைகின்றனர் என SLBFE தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 2,374 இலங்கையர்கள் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர், 2,114 பேர் இஸ்ரேலுக்கும், 1,899 பேர் ருமேனியாவுக்கும், 1,947 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக SLBFE மேலும் தெரிவித்துள்ளது.