2000 ஆம் ஆண்டில் உலக ஏதிலிகள் தினத்தை நிறுவிய ஐ.நா.வின் கூற்றுப்படி, இப்போது உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியான்மர் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆண்டின் கருப்பொருளாக "ஒவ்வொரு செயலும் கணக்கிடப்படுகிறது" என்று அறிவித்தது. கொரோனா நோய்ப்பேரிடரால் இந்த ஆண்டு நேரடி ஆதரவுச்செயல்களில் ஈடுபட மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏதிலிகளுக்கு உதவ இந்த மெய்நிகர் நடவடிக்கைகள் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் நிகழ்வுகளில் (ஆன்லைனில்) சேர்ந்து பங்காற்றலாம் :
தற்போதைய சூழலில் ஆன்லைன் வசதியினூடே பல செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில் ஒன்றாக ஐ.நா பொதுச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மெய்நிகர் ஒவியக்கண்காட்சியைக் சென்று பார்வையிடலாம். அதாவது பல்கேரிய கலைஞர்களாலும் சில ஏதிலிகளாலும் படைக்கப்பட்ட ஓவியங்கள் இணைத்தளம் ஒன்றில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இணைப்பு : https://www.gobeyond.bg/
மேலும் உலகெங்கிலும் உள்ள ஏதிலிகளின் அனுபவங்களை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களின் தேர்வை இந்த இணைப்பில் சென்று காணலாம். அதோடு ஒன்பதாவது ஆண்டு ஏதிலிகள் திரைப்பட விழாவை பார்வையிடுவதன் மூலம் போராட்ட காலங்களில் பின்னடைவைப் பற்றி மேலும் அறியலாம்.
ஐ.நா. பொதுச்சபையின் அனுசரனையில் வழங்கப்படுகின்ற கூடுதல் மெய்நிகர் நிகழ்வுகளைக் காண, : இங்கே
ஆதரவு மற்றும் நன்றியுணர்வு செய்திகளை அனுப்பலாம் :
சர்வதேச மீட்புக் குழு 40 க்கும் மேற்பட்ட நாடுகளிலும், 20 க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களிலும் பணியாற்றியுள்ளது, உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிலருக்கு சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, பணம் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகளை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு, அத்தியாவசிய தொழிலாளர்களாக கடமையாற்றும் ஏதிலிகளுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அனுப்புமாறு அவ் அமைப்பு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.