பிரதமர் மோடி காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொளி வாயிலாக பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக இன்று 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
நிதி, தபால் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, அணுசக்தி துறை , ரெயில்வே தணிக்கை மற்றும் கணக்கு துறை, உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்ப, இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அரசு ஊழியர்களாக இதன் மூலம் பொறுப்பு ஏற்கின்றனர்.
மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், எல்.டி.சி., ஸ்டெனோ, பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் எம்.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. பணி வாய்ப்புக்கான தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தொழில் நுட்பம் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது.
அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பிரதமரின் இலக்கு ஆகும்.