அரச சேவை ஆணைக்குழுவால் இரண்டு வருட காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நியமனங்கள் இன்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
அரச சேவை ஆணைக்குழுவால் இரண்டு வருட காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சுகாதார சேவைகள் குழுவின் தலைவராக டி.எம்.எல்.சி. சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹப்புகொட மற்றும் நிமல் சரணதிஸ்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரச சேவை ஆணைக்குழுவால் கல்வி சேவை குழுவின் புதிய தலைவராக ஜே.ஏ. ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, எம்.என்.கே. வீரசிங்க மற்றும் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வைத்திய அதிகாரிகள், பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளை ஆரம்ப தரத்திற்கு நியமித்தல், சேவையை உறுதிப்படுத்துதல், வருடாந்த இடமாற்றங்களை மேற்கொள்வது மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட பல பணிகளை சுகாதார சேவை குழு மேற்கொள்கிறது.