புதன்கிழமை 2050 இற்குள் கார்பன் நடுநிலை நிலையை எட்டும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கைச்சாத்திட்டுள்ளார்.
ஜேர்மனியின் புதிய பிரதமராக ஒலாப் ஸ்கோல்ஸ் பதவியேற்பு!
ஜேர்மனியின் பிரதமராக சுமார் 16 ஆண்டுகள் பதவி வகித்த செல்வாக்கு மிக்க தலைவரான ஏஞ்சலா மேர்கெல் இன் பதவிக் காலம் முடிந்து நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார்.
ஒமைக்ரோன் பரவுகை குறித்து WHO இன் சமீபத்திய எச்சரிக்கை!
உலகில் இதுவரை சுமார் 57 நாடுகளில் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரோன் பரவியிருப்பது அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இதன் பரவுகை அதிகரிக்கும் அதே நேரம் கவலையளிக்கக் கூடிய விதத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது.
புருண்டி சிறை தீ விபத்தில் 38 கைதிகள் பலி! : ஜேர்மனி சேஞ்சலர் மெர்கெல் ஓய்வு
செவ்வாய்க் கிழமை காலை கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் கிடேகா நகரில் அமைந்துள்ள சிறைச் சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்ததாகவும், 60 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிற திரிபுகளை விட ஒமைக்ரோன் மிகத் தீவிரமானதல்ல! : WHO
கோவிட் பெரும் தொற்று வைரஸின் பிற திரிபுகளை விட ஒமைக்ரோன் மிகத் தீவிரமானதாகத் தெரியவில்லை என்றும், ஆனால் இதை உறுதிப் படுத்த இன்னும் தீவிர ஆய்வுகள் தேவைப் படுவதாகவும் உலக சுகாதாரத் தாபனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் AFP ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளனர்.
பேர்ல் துறைமுகத் தாக்குதலின் 80 ஆவது நினைவை அனுட்டிக்கும் அமெரிக்கா!
2 ஆம் உலகப் போரின் போது முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப் படுவது அமெரிக்காவின் பிரபல பேர்ல் துறைமுகம் (Pearl Harbor) மீதான ஜப்பானிய விமானங்களின் குண்டுத் தாக்குதலாகும்.
11 வகை டைனோசர்களின் புதை படிமம் இத்தாலியில் கண்டுபிடிப்பு
சமீபத்தில் இத்தாலியில் சுமார் 11 டைனோசர் கூட்டங்களின் புதை படிமம் (Fossils) முதன் முறையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.