அந்நியச் செலாவணியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தாமல் வாகன இறக்குமதியை முறையான முறையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகளும் 19,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன
கடந்த ஆண்டு இலங்கையில் 33,000 க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோயாளிகளும் 19,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன, ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோயானது மிகவும் பொதுவானது மற்றும் பெண்களிடையே மார்பக புற்றுநோயானது முன்னணியில் உள்ளது என்று சுகாதார செயலாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 10ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) 21வது வருடாந்த கல்வி அமர்வுகளில் அவர் புள்ளிவிபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அரசுக்கு சொந்தமான வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்
அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு ‘1997’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த வாரம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர இடைக்கால கொடுப்பனவு
ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுங்க மற்றும் IRD அதிகாரிகளுடன் வருவாய் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) உயர் அதிகாரிகளுடன் நேற்று (09) ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
வடக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய முகம்; கீதாநாத் காசிலிங்கம் போட்டியிடுகிறார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் பீரோ உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.