மின்சாரத் துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘இலங்கை மின்சார சட்டமூலம்’ வியாழக்கிழமை (25) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2023 (2024)க்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் பட்டறைகள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பரீட்சைகள் முடியும் வரை தடைசெய்யப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி டாக்டர் இப்ராஹிம் ரைசி ஆகியோர் இணைந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை (UOMDP) இன்று கூட்டாக ஆரம்பித்து வைத்தனர்.
மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடத்தப்படும்.
NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் SJB தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான உத்தேச விவாதத்தை மே 7,9,13,14 ஆம் திகதிகளில் ஒன்றில் நடத்துவதற்கு தயார் என்று தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று உத்தியோகபூர்வமாக சமகி ஜன பலவேகய (SJB) க்கு அறிவித்துள்ளது.