ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தமது கட்சி இன்னமும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு மாறுபட்டதாக இருப்பதாக கட்சியின் தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6% அதிகரித்து 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவரின் பெயரை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்மட்ட உரையாடல்களில் முன்மொழிந்திருக்கிறார். குறிப்பாக, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரிடம், விரிவுரையாளரின் பெயரை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.