இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்ட நேரத்தில், நாட்டின் எந்தவொரு பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் கூடாது எனும் மற்றுமொரு தடை உத்தரவு நாடாளவியரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.
இலங்கையில் இந்திய இராணுவமா ?
இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைகள் காரணமாக, இந்திய இராணுவத்தின் உதவி கோரப்பட்டதாகவும், இந்தியப்படைகள் தென்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தம் உன்மைக்குப் புறம்பானவை.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது !
இலங்கையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம் !
இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் காரணமாக, நாடு முழுவதற்குமான அவசரகாலச்சட்டம் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று முதல் இந்த அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
இலங்கையில் தொடரும் பதற்றம் - நேற்றை கலவரங்களில் 45 பேர் கைது !
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள், நேற்றிரவு 10 மணியளவில், மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் சமீபமாக, வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் திடீர் ஆர்ப்பாட்டங்கள் - உடனடி ஊரடங்கு உத்தரவு !
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக இன்று இரவு கூடிய மக்கள், ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் அதிக வீத பணப்பரிவர்த்தனை செய்த நாணயமாற்று நிலையங்களின் அனுமதி ரத்து !
இலங்கைத் தலைநகர் கொழும்பில், அதிக வீதப் பணப்பரிவர்த்தனை செய்த தனியார் நாணய மாற்று நிலையங்கள் சிலவற்றின் அனுமதியை இலங்கை மத்திய வங்கி ரத்துச் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.