ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபை அமர்வில் (UNGA) கலந்து கொள்ள நியூயோர்க்கிற்கு சென்றுள்ளார்.
மதுக்கடைகளை திறப்பதற்கான காரணத்தை அமைச்சர் வெளியிட்டார்
"அரசாங்கத்தின் அனுமதியின்றி, இந்த மதுபானக் கடைகளைத் திறக்க முடியாது. நாடு முழுவதும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் அரசு அனுமதி அளித்த பிறகு இப்போது திறக்கப்பட்டுள்ளன ”என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது நுகர்வோருக்கு பில்களை செலுத்த வழங்கப்பட்ட நிவாரண காலத்தை இனி நீட்டிக்க முடியாது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினை தடுக்கும் நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும்: கப்ரால்
அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் கூறுகிறார்.
ஊரடங்கு ஒக்டோபர் 1 வரை நீடிப்பு
அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது: ஜயநாத் கொலம்பகே
எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு தருணத்திலும் வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது என்று வெளிவிகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.