தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் ரூபா 21,000 என பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று கையொப்பமிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகம் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவுடன் நாளாந்தம் 1,350 ரூபாவை நாளாந்தம் வழங்குவதற்கு சம்பள சபையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் மஹாபொல புலமைப்பரிசில் ரூ.7,500 ஆகவும், பர்சரி உதவித்தொகையை ரூ.6,500 ஆகவும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் ஏனைய செயலமர்வுகளை நடத்துவது நாளை (11) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கைக்கு வரவிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டில் தற்போது நிலவும் விசா மற்றும் கடவுச்சீட்டு நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்நோக்குவதாக NPP பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.