கிளிநொச்சியில் வரட்சி காரணமாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்த 150 மில்லியன் டொலர்கள் - உலக வங்கி
இந்தியாவுடனான ஒத்துழைப்பின் மூலம் திருகோணமலை முக்கிய ஆற்றல் மையமாக மாற்றப்படும் - ஜனாதிபதி
ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இந்தியாவோடு பேசுதல்!
இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளடங்கிய எட்டுப் பேர் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஐந்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள், பல கோணத்துப் பயணம். நிலைமை அப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றாக அழைத்துப் பேசுதல் என்பது ஆச்சரியமூட்டும் செய்திதான்.